பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரெயில் மொரப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்

ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு;

Update: 2025-08-30 03:06 GMT
சேலம்-ஜோலார்பேட்டை வழி மார்க்கத்தில் அமைந்துள்ள தாசம்பட்டி- சாமல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி ஈரோட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரெயில் (56108) இன்று (சனிக்கிழமை), வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் ஈரோடு முதல் மொரப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும், இந்த ரெயில் மொரப்பூர் முதல் ஜோலார்பேட்டை வரை இயங்காது. இதேபோல் மறு மார்க்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (56107) இன்று (சனிக்கிழமை), வருகிற 1,2 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை முதல் மொரப்பூர் வரை இயங்காது. இந்த ரெயில் மொரப்பூர் முதல் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News