சேலத்தில் ருசிகரம் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில்
நடனமாடிய அருள் எம்.எல்.ஏ.;
சேலத்தை அடுத்த சித்தனூரில் ஒரு நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் அருள் (பா.ம.க.) கலந்து கொண்டார். பின்னர் பனங்காடு கிராம மக்களை சந்திப்பதற்காக சேலத்தாம்பட்டி கிராமம் வழியாக சென்றார். அப்போது அந்த ஊர் மக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. கிராம மக்கள், அருள் எம்.எல்.ஏ.வை கண்டதும், விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தனர். அவரும் காரை விட்டு இறங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஆடிபாடி சென்றனர். அவர்கள் அருள் எம்.எல்.ஏ.வை நடனமாடும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளின்படி அருள் எம்.எல்.ஏ.வும் அவர்களுடன் நடனமாடியபடி ஊர்வலத்தில் சிறிது தூரம் சென்றார். பின்னர் விநாயகரை வழிபட்ட அருள் எம்.எல்.ஏ., கிராம மக்கள், இளைஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.