கம்மநல்லூர்-முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து.

கம்மநல்லூர்-முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து.;

Update: 2025-08-30 10:52 GMT
கம்மநல்லூர்-முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா புனவாசிப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 48. இவர் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் கம்மநல்லூர் அருகே சென்றபோது அதே சாலையில் திருப்பூர் துரைசாமி நகரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் வேகமாக ஓட்டி வந்த கார் ராமச்சந்திரன் டூவீலரை முந்தி சென்று, திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக்கிட்டதால் ராமச்சந்திரன் டூவீலர் ஜெயகிருஷ்ணன் காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரனை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரில் லாலாபேட்டை காவல் துறையினர் ஜெயகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News