கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி அருகேயுள்ள போத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (37)டிராக்டர் ஓட்டுநர் இவர் பாகலூர் சாலையில் ஜி.மங்கலம் அருகே டிராக்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்தது. இதில் அருள்குமார் படு காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாகலூர் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.