தளவாபாளையம்-டூ வீலர்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.

தளவாபாளையம்-டூ வீலர்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம்.;

Update: 2025-08-31 02:57 GMT
தளவாபாளையம்-டூ வீலர்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா கடம்பன்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் வயது 60.இவர் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி அளவில் கரூர் - பரமத்தி சாலையில் அவரது டூவீலரில் தளவாபாளையம் அருகே சென்றபோது, எதிர் திசையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த ஏழுமலை வேகமாக ஓட்டி வந்த லாரி விஸ்வநாதன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஸ்வநாதன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து விஸ்வநாதனின் மகன் முருகானந்தம் அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News