சேலம் வழியாக குஜராத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

ரெயில்வே நிர்வாகம் தகவல்;

Update: 2025-08-31 04:19 GMT
விழுப்புரத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக குஜராத் மாநிலம் உத்னா ரெயில் நிலையம் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. அதன்படி விழுப்புரம் - உத்னா சிறப்பு ரெயில் (06159) நாளை (திங்கட்கிழமை) விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.20 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக செப்டம்பர் 3 ந் தேதி காலை 5.30 மணிக்கு குஜராத் மாநிலம் உத்னா ரெயில் நிலையம் சென்றடையும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News