ஏற்காடு அடிவாரத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறை

பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன;

Update: 2025-08-31 04:26 GMT
சேலம் ஏற்காடு அடிவாரம் கோல்டன் கேட்ஸ் எதிரில் உள்ள புட் ஹில்ஸ் ஓபன் லேர்னிங் சென்டரில், வொண்டர் லேப் - தி லிட்டில் தியேட்டர் ஆகியவை இணைந்து குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு தி லிட்டில் தியேட்டர் நிறுவனர் ஆயிஷா ராவ் தலைமை தாங்கினார். நடிகர்கள் கிருஷ்ணகுமார், டேன்சிங் ரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் வொண்டர் லேப் உரிமையாளர் வர்ஷா கலந்து கொண்டு பேசும்போது, இந்த பயிற்சி பட்டறையில் 2 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு பொம்மலாட்டம், தியேட்டர் ஸ்டேஜ் பர்பாமன்ஸ், நடனம் போன்ற பயிற்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் சினிமா, விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உதவும் என்றார்.

Similar News