சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார்;
சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் உத்தரவின்பேரில் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு 200 வாக்குப்பதிவு எந்திரங்கள், 600 வி.வி.பேட் எந்திரங்கள் உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பறைகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கப்பட்டன. இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நடராஜன், தாசில்தார்(தேர்தல்) தாமோதரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.