சென்னை - திருவனந்தபுரம் இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

ரெயில்வே அதிகாரிகள் தகவல்;

Update: 2025-08-31 04:33 GMT
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (06127) இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மாலை 5.30 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு 6.28 மணிக்கு நாமக்கல் சென்றடையும், நாமக்கல்லில் இருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு 6.48 மணிக்கு கரூர் சென்றடையும், அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Similar News