கரூர்- மாரத்தான்

கரூர்- மாரத்தான்;

Update: 2025-08-31 06:51 GMT
கரூர்- மாரத்தான் & வாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து பி ஐ ஜே இ இன்னவேட்டி விஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கரூர் வெண்ணமலை பகுதியில் உள்ள பரணி பார்க் பள்ளி வளாகத்தில் இருந்து பரணி கார்டன் மற்றும் தீரன் சின்னமலை நகர் வழியாக 5 மற்றும் 3 கிலோமீட்டர் தூரம் வரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் பி ஐ ஜே இ இன்னவேட்டி விஷன்ஸ் நிறுவன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போட்டியில் 10 வயது உட்பட்ட இருபால் குழந்தைகள்,50 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் வாக்கத்தான் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து 11 முதல் 18 வயது உடைய இளைஞர் மற்றும் இளம் பெண்கள்,19 முதல் 49 வயது உடைய ஆடவர் மற்றும் மகளிர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News