கருமாத்தூரில் நலம் காக்கும் திட்ட மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம் கருமாத்தூரில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது;
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருமாத்தூர் ஊராட்சியில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று (ஆக.30) நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் இளந்திரை அபர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் கண் இதயம் பொது மருத்துவம் குழந்தை வளர்ச்சி மகப்பேறு உட்பட அனைத்து விதமான மருத்துவம் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.