கரூர்-சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல்.
கரூர்-சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல்.;
கரூர்-சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் -கோவை சாலையில் செயல்படும் டாஸ்மார்க் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 29 என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு , அவர் விற்பனைக்கு வைத்திருந்த 25 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.