கரூரில் லயன் சங்கங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கரூரில் லயன் சங்கங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;

Update: 2025-08-31 10:47 GMT
கரூரில் லயன் சங்கங்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கரூர் ஹோஸ்ட் லயன் சங்கம் கரூர் அன்னை மகளிர் கல்லூரி லியோ சங்கம் புலியூர் செட்டிநாடு கல்லூரி லியோ சங்கம் மற்றும் கரூர் அரசன் கண் மருத்துவமனை சேவ் சைட் பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாவட்ட பார்வையிழப்பு சங்கம் உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் நோயாளிகளுக்கு கண்ணில் புரை உண்டாகுதல் மாறுகண் நீர் அழுத்த நோய் மாலைக்கண் நோய் சீழ் நீர் வடிதல் கிட்ட பார்வை ஆகியவற்றிற்கு இலவசமாக பரிசோதனை நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் வர்த்தக சங்க பொருளாளர் கருப்புசாமி மற்றும் கந்தசாமி பிரபுராஜ் ரவிச்சந்திரன் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News