கடலூர்: சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு
கடலூரில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியின் போது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. OTP மோசடிகள், தனிநபர் கடன் செயலிகள், டிஜிட்டல் அரெஸ்ட், பள்ளி உதவித்தொகை மோசடிகள், பகுதி நேர வேலை மோசடிகள் மற்றும் கடன் செயலிகள் போன்ற பல்வேறு குற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.