குந்தாரப்பள்ளியில் லாரி தீயில் எரிந்து சேதம்

குந்தாரப்பள்ளியில் லாரி தீயில் எரிந்து சேதம்;

Update: 2025-09-01 02:00 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் லாரி தீயில் எரிந்து சேதம் பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராஜுதாஸ் (45) இவர் நேற்று முன்தினம் சோலார் பேனல்களை இறக்கிவிட்டு மீண்டும் லாரியில் சென்னைக்கு சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் நிறுத்தி ராஜுதாஸ் சமையல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் லாரியில் தீபற்றி கொண்டது. இதில் லாரி தீப்பற்றி கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News