வலங்கைமானில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலங்கைமானில் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு;

Update: 2025-09-01 03:08 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலயங்களில் விநாயகருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் விநாயகர் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. தற்காலிகமாக பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போலீசார் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Similar News