ஓட்டு போட்டவர்களை அதிகாரத்திலுள்ளவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்-நடிகை அம்பிகா பேட்டி.
ஓட்டு போட்டவர்களை அதிகாரத்திலுள்ளவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்-நடிகை அம்பிகா பேட்டி.;
ஓட்டு போட்டவர்களை அதிகாரத்திலுள்ளவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்-நடிகை அம்பிகா பேட்டி. கரூர் மாவட்டம், புகழூர் 4 ரோடு நாடார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி 61. கரூர்-புகழூர் தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (45) திமுக கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி சபீனா புகழூர் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த 17.08.25 அன்று ரவி வார்டு கவுன்சிலர் சபீனாவிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு அவரது கணவர் நவாஸ்கான், ஆளும் கட்சியான எங்களையே கேள்வி கேட்கிறாயா என்று கடுமையாக பேசி கணவன் மனைவி இருவரையும் தாக்கியுள்ளார். இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சுபாஷினி 15 வார்டு கவுன்சிலரின் கணவர் நவாஸ் கான், மாமனார் ஜான்பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. இந்த நிலையில் கரூரில் நண்பர்கள் வீட்டிற்கு வந்த நடிகை அம்பிகா இதனை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம்தெரிவித்த அவர் ஓட்டு போட்டவர்களை அதிகாரத்திலுள்ளவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.