காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை. ஆர்டிஓ விசாரணை.
மதுரை சமையல் உள்ள அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி புனித ஆரோக்கிய மேரியின் 2வது மகளான மெலினா (19) என்பவருக்கு மதுரை அய்யங்கோட்டை செந்தில் வேலனுடன் (25) இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சமயநல்லுாரில் காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது ஆக.30 இரவு மீண்டும் மனைவியுடன் தகராறு செய்ததால் மெலினா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயநல்லுார் போலீசார் ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.