சிவசேனா சார்பில் கொண்டையூரில் விநாயகர் சிலை ஊர்வலம்

சிவசேனா தமிழகம் அமைப்பு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது;

Update: 2025-09-01 05:31 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே கொண்டையூர் கிராமத்தில் சிவசேனாதமிழகம் அமைப்பு சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.இந்நிலையில் நேற்று இரவு இந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாலா மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Similar News