விமான நிலையத்தில் முன்னாள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
சென்னையிலிருந்து இன்று மதுரை வந்த முன்னாள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது;
மதுரையில் இன்று (செப்.1) நண்பகலில் நான்காம் கட்ட புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் தொடங்குவதற்காக விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எடப்பாடி வந்த போது குடையுடன் வந்த அதிமுக தொண்டர் ஒருவர் எடப்பாடிக்கு குடை பிடித்து சென்ற நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பழனிச்சாமி ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில் தங்குவதற்கு சென்றார்.