சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவரிடம் செல்போன் பறிப்பு
வடமாநில சிறுவன் கைது;
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள குடிமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை காய்கறிகளை வாங்க சூரமங்கலம் உழவர் சந்தைக்கு வந்தார். அப்போது ஒருவர், பாஸ்கரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் வடமாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்தனர்.