சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்

போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-09-01 09:14 GMT
சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அமிர்தம் (74). இவர் கடந்த 23-ந்தேதி தனது மகன் மற்றும் கணவருடன் கேரளா சென்றார். பின்னர் கேரளாவில் இருந்து ரெயிலில் சேலம் வந்தார். ஜங்சன் ரெயில் நிலையத்தில் அவர்கள் இறங்கினர். பின்னர் மூதாட்டி நடைமேடையில் இருந்து குடும்பத்துடன் எஸ்கலேட்டர் வழியாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மூதாட்டி அமிர்தம் கழுத்தில் அணிந்து இருந்த 2¾ பவுன் நகையை பறித்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி சேலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது சேலம் மணியனூர் சண்முக நகரை சேர்ந்த முகமது ரபீக் ராஜா (29) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 2¾ பவுன் நகையையும் மீட்டனர்.

Similar News