விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில்

தேசிய விளையாட்டு தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு;

Update: 2025-09-01 09:16 GMT
ஆக்கி முன்னாள் வீரர் தியான்சந்த் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் இளைஞர் நல அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். அப்போது, உடல் ஆரோக்கியத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச தடகள வீரர் இளம்பரிதி கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாணவ குழுக்களுக்கும் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர்கள் ஜெயபாரதி, சூர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News