கரூரில் மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் பா.ம.க போராட்டம் நடத்தும்.மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பேட்டி.
கரூரில் மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் பா.ம.க போராட்டம் நடத்தும்.மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பேட்டி.;
கரூரில் மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் பா.ம.க போராட்டம் நடத்தும்.மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பேட்டி. பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் கரூரில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களிடம் மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது,கரூர் கிழக்கு ஒன்றியத்தில் காவிரி ஆற்றப்படுகையான திருமுக்கூடலூரிலிருந்து தோட்டக்குறிச்சி வரை அரசு அதிகாரிகள் ஆதரவோடு தினமும் ஆயிரக்கணக்கான யூனிட் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும்,இதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் துணையுடன் மணல் கொள்ளை நடப்பதாகவும் இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் புகார் அளித்ததாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் எனவும்,நடவடிக்கை எடுக்க தவறினால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ரமேஷ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்.