வலங்கைமானில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மனைவியிடம் கோபித்துகொண்டு விஷம் குடித்தவர் உயிரிழப்பு;
வலங்கைமானை சேர்ந்த ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் தண்டாங்கோரையில் வசித்து வந்தார்.இந்நிலையில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வலங்கைமானில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை பெற்ற நிலையில் ஸ்ரீகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.