கரூர்-மணல் குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது.முகிலன் பேட்டி.

கரூர்-மணல் குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது.முகிலன் பேட்டி.;

Update: 2025-09-01 11:17 GMT
கரூர்-மணல் குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது.முகிலன் பேட்டி. காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கரூரில் மணல் குவாரி அமைக்க கூடாது என மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2023 அக்டோபர் 4- தேதி தேதி கரூர் காவிரி ஆற்று படுகையான அச்சம்மாள்புரம், நெரூர் வடக்கு பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் இரண்டு புதிய மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு ஐந்து முறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கிருந்த மணல் அடித்துச் செல்லப்பட்டது. எனவே தற்போது அப்பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் அப்பகுதியில் குடிநீர் ஆதாரங்கள் போக்குவரத்து மேம்பாலங்கள் கதவணைகள் உள்ளதால் மணல் எடுக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயன் ராஜேஷ் கண்ணன் வழக்கறிஞர் சண்முகம்,தனியரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News