தமிழ்நாடு பிராமண சங்க கூட்டத்தில் மாணாக்கர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு பிராமண சங்க கூட்டத்தில் மாணாக்கர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-09-01 12:01 GMT
தமிழ்நாடு பிராமண சங்க கூட்டத்தில் மாணாக்கர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் வாசவி மஹாலில் தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துவக்க நிகழ்வாக வேத பாராயணங்களை கூறி இறை வாழ்த்து நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிராமண சமூகத்தைச் சேர்ந்த 10 மற்றும் பிளஸ் டூ வகுப்பில் சாதனை படைத்த மாணாக்கர்கள் 22 பேருக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில அறக்கட்டளை உறுப்பினர் ஸ்ரீ அஜீத்தன்,மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பெரியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News