விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;
விழுப்புரம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த ஜூலை 15ம் தேதி துவங்கியது. இதில், 15 துறைகள் சார்பில் பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம். முகாமில், மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார், இ-சேவைகள் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை கோரும் மகளிர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களோடு பதியலாம்.முகாம், இன்று 2ம் தேதி விழுப்புரம் நகராட்சி, திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனுார், செஞ்சி ஒன்றியங்களில் நடக்கிறது.செஞ்சி ஒன்றியம், மழவந்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கும் முகாமில், பழவலம், மழவந்தாங்கல் ஊராட்சி மக்கள் மனுக்களை வழங்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.