சேலம் அருகே கஞ்சா விற்றவர் சிக்கினார்

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-09-02 09:03 GMT
சேலம் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது 36) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News