சேலத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்தவர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-09-02 09:06 GMT
சேலம் பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 23). இவர் கடந்த 30-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சண்முகத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு அவர் கொடுக்க மறுத்தார். இதையடுத்து கோகுல் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகத்தை மிரட்டி ரூ.1,000 பறித்துவிட்டு சென்றார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோகுலை நேற்று கைது செய்தனர்.

Similar News