சேலத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-09-02 09:07 GMT
சேலம் சிவதாபுரம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 75), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்வதற்காக இரும்பு கம்பிகளை கீழே இருந்து மேல் மாடிக்கு எடுத்து சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி அருணாச்சலம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News