சேலத்தில் பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-09-02 09:08 GMT
சேலம் அய்யந்திருமாளிகை காட்டு வட்டம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவர் செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மகன் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 30) என்பவரிடம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த சித்ராவிடம் பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி விறகு கட்டையால் சத்தியராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சித்ரா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து சத்தியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News