சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நகர கோட்ட அலுவலகம் சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.