திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் வேணுகோபால். இவர் சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் துறையூர் சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த ½ பவுன் தோடு, ½ பவுன் மோதிரம் என மொத்தம் ஒரு பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.