திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்
பொதுமக்களிடமிருந்து 310 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்;
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்களை அளித்தனர்.பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.