சாலை விபத்தில் காவலர் பலி
மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலியானார்.;
மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்த மணிமாறனின் மகன் அஜய் (27) என்பவர் மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு ஆறாவது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (செப்.1) அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.