திருப்பரங்குன்றம் கோவில் நடை அடைப்பு விவரம்.

மதுரை திருப்பரங்குன்றம் சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-09-03 12:50 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் செப்.‌‌7ல் கோயில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். செப். 8 அதிகாலையில் கிரகண பூஜை முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News