போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்;
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இன்று (செப்.3) மாலை எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயண கூட்டத்தில் அதிமுக கொடியைவிட த.மா.க பா.ஜ.க ஐ.ஜே.கே தென்னிந்திய பார்வர்ட் கட்சி கொடிகள் அதிகம் காணப்படுகின்றன. கூட்டம் நடைபெறும் பகுதியான பழங்காநத்தம் பைபாஸ் முழுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூட்டம் காணப்படுகிறது.