எலக்ட்ரிக் ஆட்டோ கவிழ்ந்து விபத்து
மதுரை அருகே கப்பலூரில் எலக்ட்ரிக் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது;
மதுரை அருகே கப்பலூர் நான்கு வழி சாலை திருமங்கலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்த போது கப்பலூர் காலனி அருகே ஆட்டோ சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.இதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை திருமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.