காளை முட்டியதில் விவசாயி பலி
மதுரை அலங்காநல்லூர் அருகே காளை முட்டியதில் விவசாயி பலியானார்.;
மதுரை அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி பகுதி விவசாயி சுப்பிரமணி( 55) என்பவர் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று (செப்.3) மாலை பெருமாள் கோயில் அருகே மேய்ந்த பசு மாடுகளுக்கு காளை மாடு ஒன்று இடையூறு செய்துள்ளது. அந்த காளையை விரட்ட சென்ற சுப்ரமணியை காளை முட்டி தூக்கி தள்ளியதில் கீழே விழுந்து தலையில் பின்பக்கம் காயமடைந்தவரை அலங்காநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.