சேலத்தில் அனுமன் சிலை திருடியவர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-09-04 08:20 GMT
சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அனுமன் சிலை ஒன்று கடந்த மார்ச் மாதம் திருட்டு போனது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு உள்ள ஒரு புதரில் கிடந்த அனுமன் சிலையை மீட்டனர். பின்னர் சிலையை திருடி வீசி சென்றவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேச்சேரியை சேர்ந்த காசிலிங்கம் (வயது 50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அனுமன் சிலையை திருடி வீசிச்சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News