புதுச்சேரியில் இருந்து சேலத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தல்

டிரைவர் உள்பட 3 பேர் கைது;

Update: 2025-09-04 08:23 GMT
சேலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை மின்னாம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நின்ற கன்டெய்னர் லாரியில் இருந்து அருகில் உள்ள காருக்கு மதுபான பாட்டில்கள் மாற்றியது தெரிய வந்தது.. இதையடுத்து கன்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, சிங்காரப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த விஜயலட்சுமணகுமார் (வயது 58) என்பது தெரிந்தது. மேலும் அவர் புதுச்சேரியில் இருந்து கன்டெய்னர் லாரியில் சேலத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்குவதற்காக வாசிங்மெசினை ஏற்றிக்கொண்டும், ஒரு பகுதியில் மதுபான பாட்டில்களை நண்பர்களுக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விஜய லட்சுமணகுமார் மற்றும் மதுபான பாட்டில்களை வாங்க அவருடைய நண்பர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சந்திரன் மகன் குமரேசன் (29), முருகேசன் மகன் லோகநாதன் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 150 மதுபான பாட்டில்கள், கன்டெய்னர் லாரி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Similar News