வீரபாண்டி கிழக்கு ஒன்றிய பகுதியில்
அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்;
சேலம் மாவட்டம் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில் ராஜமுத்து எம்.எல்.ஏ. முன்னிலையில் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி 50 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அவர், மாற்றுக்கட்சியினரை சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் சதாசிவம், அன்பு, இளம்பிள்ளை பேரூர் செயலாளர் கிருஷ்ணன், மாணவர் அணி துணைத் தலைவர் தினேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் சேகர், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.