சேலம், நாமக்கல் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்

ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவிப்பு;

Update: 2025-09-04 08:27 GMT
நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, நாமக்கல், சேலம் வழியாக கர்நாடக மாநிலம் ஷிமோகா டவுன் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்லை- ஷிமோகா டவுன் வாராந்திர சிறப்பு ரெயில் (06103) வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும் ெரயில் அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக அன்று இரவு 12.50 மணிக்கு சேலம் வந்தடைகிறது. இங்கிருந்து 1 மணிக்கு புறப்பட்டு கும்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக மறுநாள் மதியம் 1 மணிக்கு ஷிமோகா டவுன் ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஷிமோகா டவுன்- நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06104) வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 27-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் ஷிமோகா டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News