உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்;

Update: 2025-09-04 09:55 GMT
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுக்கரணை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் ஒன்றிய செயலாளர் கோகுலகண்ணன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் மேகலா வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர பேட்டரி வாகனம் வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தார் அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 45 நாட்களுக்குள் பேட்டரி வாகனம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News