கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 139.41 கோடி மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் 8 தளங்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.