ஆற்காடு:வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் புகார்
வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் புகார்;
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், சாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், உப்புபேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடபதி என்பவர் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் ரகளையில் ஈடுபட்டார். கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜனிடம் புகார் மனு அளித்தனர்.