வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்;
செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் கால்வாய் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் சினேகா பாா்வையிட்டு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு ஒரு மாத காலத்துக்குள் பணிகளை முடித்து கட்டடத்தை ஒப்படைக்குமாறு ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கண்டிகைதாங்கல் ஏரியை பாா்வையிட்டு தூா்வாரி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும், ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் நகராட்சிஅலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.