அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது;
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நந்தி பெருமானுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு கோயில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.