பால்குட ஊர்வலம்

ஊர்வலம்;

Update: 2025-09-06 03:56 GMT
சின்னசேலம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. சின்னசேலம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை 7ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடந்தது. பெண் பக்தர்கள் பெருமாள் கோவில் தெரு, கடை வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் ஊர்வலம் சென்றனர். அம்மனுக்கு பால் அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை தேர் திருவிழா நடக்கிறது.

Similar News